புதன், 12 செப்டம்பர், 2012

ஏன் அணு உலை வேண்டாம்?சில காரணங்கள்

ஒரு சில ஊடகங்களும் காங்கிரசு கனவான்களும் கூறுவது என்னவெனில் கூடங்குளம் அணு உலை நிறுவபட்டுவிட்டால் தமிழகத்தில் இருபத்துநாலு மணி நேரமும் எல்லாரும் ஏசியை நிறுத்தாமல் ஓட்டும் அளவுக்கு மின்சாரம் கிடைக்குமாம்...
இந்த அணு உலையின் நிறுவு திறன் 1000MW.இவர்கள்(மேற்சொன்ன அறிவுஜீவிகள்) கூறுவது என்னவெனில் இந்த ஆயிரத்தில் நானூறு மெகாவாட் தமிழகத்துக்கு போனால் போகிறதென தருவார்களாம்...அதை வைத்து மின் பற்றாக்குறை என்ற வார்த்தையையே அகராதியில் இருந்து எடுத்து விடலாமாம்...சிப்பு வருது சிப்பு...
எந்த ஒரு மின் உற்பத்தி நிலையமும்(அணு அல்லது அனல்) அதன் முழு கொள்ளளவில் இயக்கப்படாது...உதாரணத்திற்கு நீங்கள் ஒரு டூ வீலர் வைத்துள்ளீர்கள்...அதில் அதிக பட்ச வேகம் நூறு kmph எனவைத்து கொள்வோம்.என்றாவது நாம் அதில் அதன் அதிகபட்ச வேகத்தில் செலுத்தியிருக்கிரோமா??செலுத்தினால் என்னாகும் என நமக்கு தெரியாதா?அதே நிலைதான் ஒரு அணு உலை அல்லது அனல் உற்பத்தி எநதிரதுக்கும் பொருந்தும்.
ஒரு வேளை ஆயிரம் மெகாவாட் திறனில் இயக்கினால் அதிகபட்ச வெப்பம் வெளிப்படும்.சிறு விபத்து வந்தால் கூட அதை தடுக்க முடியாமல் போகும்.அதனால் எப்போதும் அதிகபட்சம் 40-50% விழுக்காடு திறனில்தான் இயக்கப்படும்.அதாவது அதிகபட்சம் கிடைக்கபோவது 600MW.இதை ஒரு வாய் தண்ணீர் கூட தர மனமில்லாத  பக்கத்து மாநிலங்கள் பிய்த்து போட்டது போக அதிகபட்சம் ஒரு 250 MW கிடைக்க வாய்ப்புள்ளது.அதுக்குத்தான் இம்புட்டு ரகளையா?
சரி அந்த அணு கழிவுகளை என்ன செய்வர்?ம்ம...ஹ்ம்ம்...பேசப்படாது...கூடங்குளம் அணு உலை வந்தால் தமிழகம் மின்சாரத்தில் ஜொலிக்கும்...நீங்களே பார்க்கத்தானே போகிறீர்கள்?

வெள்ளி, 4 மே, 2012

Cape Fear 1962 Vs Cape Fear 1991

               இது இரண்டு படங்களின் தொழில்நுட்ப அம்சங்களையோ அல்லது நடிகர்களின் நடிப்பையோஒப்பிடும் முயற்சி அல்ல.இது வெறும் கதாபாத்திரங்களின் தன்மை வேறுபடுதலை ஒப்பிடும் ஒரு முயற்சியே!
              மேலும் உலக சினிமா பத்தி எழுத கருந்தேள்,கொழந்த,உலக சினிமா ரசிகன் போன்றோர் ஓவர் டைம் போட்டுகினு எழுதுவதால் அதை எதிர்பார்த்து இங்கே வந்தால் ஏமாற்றமே என முன்பே சொல்லிகொள்கிறேன்.

கேப்  பியரின் கதை சுருக்கம் ஒரு குற்றவாளிக்கு(மாக்ஸ் கேடி) தண்டனை பெற்று தரும் வழக்கறிஞர்(சாம் பவ்டன்).அவரின் குடும்பத்தை பழி வாங்க முயலும் அந்த குற்றவாளி.
கேப் பியர் 1962 படத்தில் நடித்த க்ரிகரி பெக் மற்றும் ராபர்ட் மிட்சம் ரீமேக்கிலும் சிறிய கதாபாத்திரங்களில் வந்து போகின்றனர்.


இதில் குற்றவாளியாக வரும் மாக்ஸ் கேடி விடுதலைபெற்றபின் நேரடியாக வழக்கறிஞர் சாம் பவ்டனை சந்திப்பதே முதல் காட்சியாக வருகிறது.அவர் அந்த சம்பவத்தை அவருக்கு நினைவு படுத்துகிறார்.பின்னர் அவர் செய்யும் டெர்ரரான  விஷயங்களே மிச்ச படம்.
             எனக்குபடம் பார்க்கும்போது தோன்றியது மேக்ஸ் தன்னை தானே சேமுக்கு நினைவூட்டாமல் சில்மிஷங்களை செய்திருந்தால் இவர்தான் செய்தார் என்பதை கண்டுபிடிக்கவே திணறி இருப்பார்கள்.இவர் தன்னை தானே முதலில் காட்டி கொண்டதே இவர்தான் அனைத்து காரியங்களையும் செய்கிறார் என்பதை சேமுக்கு ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது(ஹீ ஹீ கேடியை விட கேடித்தனமாக யோசித்து விட்டோமோ என்று பின்னால் தோன்றியது).
1962 இல் வந்த படத்தில் கதாபாத்திரங்களின் தன்மை எப்படி?கேடியை தவிர அனைவரும் அக்மார்க் ஒழுக்க சீலர்கள்.எனக்கு பொதுவாகவே ஒரு கதாபாத்திரம் நல்லவனா கெட்டவனா என வகைபடுத்துவதே பிடிக்காது(இப்படி வகைப்படுத்தாத காரணத்தாலேயே ஓடிய படங்கள் ப்ள.Dabangg ஒரு உதாரணம்).நிஜ வாழ்க்கையில் இவன் அக்மார்க் நல்லவன் இவன் ரொம்ப கெட்டவன் என சொல்லும் வண்ணம் யாரும் இருப்பதாக எனக்கு தெரிந்தவரையில் இல்லை.
ஒவ்வொருவரும் blend of bad and good.இதுதான் என் கருத்து.
       இவன் நல்லவன் இவன் கெட்டவன் என வகைப்படுத்துவது படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கும் என நினைக்கிறேன்.
      1962 இல் வரும் படத்தில் சேமின் மகள்(சிறுமியும் அல்லாமல் குமரியும் அல்லாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் வயதுதான் இரண்டு படங்களிலும்) ரொம்ம்ம்ப நல்லவள்.சிறுமிக்கே உரிய குனங்களுடனேயே அவர் படைக்கபட்டுளார்.அவருக்கு மன சலனங்கள் எதுவும் இல்லை.டீன் ஏஜுக்கே உரிய ரெண்டுங்கெட்டான் தன்மை  எதுவும் படத்தில் இல்லை.ஒருவேளை இது இறுக்கமாக அப்போது அமலில் இருந்த production code (1967 இல் இருந்து தளர்த்தப்பட்டு வேறு முறை அமல்படுத்தப்பட்டது) காரணமாக அவரை ஒரு சலனமற்ற சிறுமியாக படைத்திருக்கலாம்  என்பது என் எண்ணம.

   ஆனால் 1992 இல் வரும் அதே சிறுமி cum குமரி கதாபாத்திரம் மிக மிக இயல்பாக உள்ளதாகவே தோன்றுகிறது.அந்த டீன் ஏஜ் வயதிற்கே உரிய ஆர்வம(வேறு எது மீது?செக்ஸ் மீதுதான்) மாற்று பாலின ஈர்ப்பு போன்றவை மிக இயல்பாக கையாளப்பட்டது என்றே கூறுவேன்.Danielle (அதான் சேமின் மகள்) மாக்ஸ் கேடியுடன் பேசும் காட்சிகளே அதற்கு உதாரணம்.அவள் கேடியுடன் பேசும்போது அவள் கண்களில் தெரியும் ஒருவித ஈர்ப்பு புதிதாக தெரிந்து கொள்ள நினைக்கும் ஆர்வம என பலவும் காணலாம்.
      குற்றம் என்பதே ஒரு சாரார் மட்டுமே செய்வதல்ல.எதிராளியும் சிறிது ஒத்துழைப்பு தராமல் குற்றம் நிகழ்வது சற்றே கடினம் என கொள்ளலாம்.இந்த சிறுமி அவளாக ஆர்வபட்டு கேடி கூப்பிட்டவுடன் அவனிடம் சென்று பேசுவது இதற்கு ஒரு சிறு உதாரணம்.ஆனால் 1962 இல்வரும் படத்தில் அப்படிப்பட்ட ஒரு காட்சி இல்லை.அவள் கேடியை கண்டவுடன் மிரண்டு ஓடுகிறாள்.அவ்வளவு நல்லவளாக காட்டபடுகிறாள்.


        நான் சொல்வதில் ஏனோ ஆணாதிக்கம் பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உளறப்படுவது அது இது என அளக்க வேண்டாம்.இது இரண்டு பாலினத்தாருக்கும் பொருந்தும்.

       1962 இல் ஒரு டிபிகல் மிடில் கிளாஸ் குடும்பம் கேடியை கொன்றாவது வாழ்வை நடத்த எத்தனிக்கும் ஒரு போக்கு தென்படும்.1992 இல் வந்த படத்தில் அந்த வழக்கறிஞரின் குடும்பத்தாரும் சற்று சலனப்படவர்கலாகவே சித்தரிக்க படுகின்றனர்.Production code தொல்லை இல்லாமல் இருந்தது ஒரு காரணமாக கூட இருக்கலாம்.யாரும் அக்மார்க் நல்லவனும் இல்லை அக்மார்க் கெட்டவனும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.எல்லாவற்றையும் சந்தேகி என்பது மார்க்ஸ் வாக்கு.எது எப்படி இருந்தாலும் இரண்டுமே க்ளாசிக்காகி விட்டது என்பதை மறுக்க இயலாது.

புதன், 2 மே, 2012

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளவா

எப்படிஇருந்தாலும் ஓலக்க சாரி ஒலக நாயகன் படம் வந்தப்புறம் எல்லாரும் பிரிச்சி மேயத்தான் போகின்றனர்!ஆனால் இன்னும் படம் வருவதற்கு முன்பே இப்படி அண்ணாத்த மாட்டிகிட்டாரே?உச்...உச்...உச்...


புதன், 21 டிசம்பர், 2011

ஒலக சினிமா எடுக்க ஒன்று கூடிய தமிழ் இயக்குனர்கள்-பாகம் 2

சென்ற விவாதத்தின் தொடர்ச்சியாக இந்த பதிவு!தனிப்பட்ட முறையில் இதை எடுத்துகொண்டு டென்சன் ஆகிறவர்கள் ஒரு வேலியம் மாத்திரை போட்டுகொள்ளலாம்!இது ஜாலிக்கு!
************************************************************************************
இப்போது பங்கேற்பவர்கள் செல்வராகவன்,அமீர்,மணிரத்னம்,கமல் ...
*
முதலில் செல்வராகவன் வருகிறார்:
கவுண்டர்: யோவ் இது ராத்திரி நேரம் இப்போ என்னா கூலிங்க்ளாஸ்?
செல்வா:  அது வந்து....
செந்தில்: அண்ணே அவுரு கண்ணு ஏன்னே அப்படி இருக்கு?
கவுண்டர்: ஆமா தீபாவளி நேரத்துல சும்மா இருந்திருக்கணும்!எந்த பிகரு கிட்டையோ போய் ரூட்டு போட்டிருக்கார்!அவ பட்டாச கொளுத்தி கண்ணுல போட்டுட்டாளாம்!
செல்வா: பப்ளிக் பப்ளிக்!தொழில் ரகசியம் வெளியே சொல்லாதீங்க!
கவுண்டர்: சரிங்க்ணா நீ கண்டின்யூ
செல்வா: ஹீரோ தம்பி "பாடி பில்டர்" தனுசு!முப்பது நாள் சேவிங் பண்ணாம நடிக்கிறாரு!
கவுண்டர்: ஏன் ப்ளேடு வாங்க காசில்லையா?
செல்வா: இட்ஸ் பீலிங்க்ஸ் மேன்!"நான் சொன்னதும் வெயில் வந்துச்சா நான் சொல்லல மழை வந்துச்சா" அப்படின்னு பாடுறான்!
கவுண்டர் : ஏன் ஹீரோ வானிலை ஆய்வு மைய ப்யூனா?
செல்வா: எகதாளம் பேசாதீங்க சார்!
கவுண்டர்: நீ தப்புத்தாளம் போடாம இரு!கண்டின்யூ
செல்வா: ஹீரோயின் பச்சா பங்கொபாதயாய்!
கவுண்டர் : என்னா? பாத்தியா பாக்கலியா?
செல்வா: இது பேருய்யா!
கவுண்டர் : நா ஏதோ சரக்குன்னு நெனச்சேன்!சரி சொல்லு
செல்வா: ஹீரோ படுக்கையிலேயே உச்சா போகுறார் அப்புறம் he  farts!
கவுண்டர்: யப்பா கப்பு தாங்காம ஹீரோயின் ஓடி போயடுராளா?ஆஹா!நிச்சயமா ஆஸ்கர்  விருதே   கிடைக்கும்!ஓங்க தம்பி லுங்கிய தூக்கிக்கினு நடு ரோட்டில் ஆடியதுக்கே தேசிய விருது கெடச்சுதே!
கவுண்டர்: ஆஸ்கர் விருதுக்கு டயலாக் ரெடி பண்ணி வச்சிகுங்க!"எல்லா புகழும் இறைவனுக்கே !எல்லா ஏழு கோடி சம்பளமும் எனக்கே"
செல்வா: தமிழின் இரண்டாவது ஸ்பால்டன் படம் இது!
கவுண்டர்  :ஏன் மொத  படத்த தூக்கிட்டு ஓடிட்டாங்களா?
செல்வா: அப்படின்னு சொல்ல சொல்லி நாலு பேருக்கு துட்டு கொடுத்திருக்கேன்!
கவுண்டர் : அட்ரா அட்ரா!ஆமா உன்னோட எல்லா படத்துலயும் யாருன்னா ஒருத்தர் மென்டலா இருப்பாங்களே!இதுல யாரு?
செல்வா: ஹீரோ சுவத்த பாத்து டாய் டாய் டாய் நான்தான் ரிவிட்டு குமாரு! அப்படின்னு கத்துறாரு
கவுண்டர்: அப்புறமென்ன?சுவர் இடிஞ்சி உழுந்துடுதா?
செல்வா:  சும்மா இருங்க!தமிழில் இது ரெண்டாவது ஸ்பால்டன் பிலிம்!
கவுண்டர்: யோவ எத்தன தபா இதையே சொல்லுவா?அப்போ மொதல் பிலிம ஆயா தூக்கினு போயிடுச்சா?
செல்வா: வேறொரு கத இருக்கு!சோழ மன்னனை நர மாமிசம் தின்னும் ஜந்துவா காட்றோம்!
கவுண்டர்: ஏற்கெனவே தமிழனை எவனும் மதிக்க மாட்றான்!இதுல இப்படி நீ காட்டுனா எவண்டா மதிப்பான்?சரித்திரம் தெரியலைன்னா மூடிகிட்டு இருக்கணும்!
செல்வா: நீங்க மொதல்ல இருந்தே வெவகாரமா பேசிகினு இருக்கீங்க!டாய் கொக்கி குமாரு கவுண்டருக்கு ஒரு கொக்கிய போடறா!
கவுண்டர்: ஐயோ எஸ்கேப்!
*

அடுத்து கமல்

கமல்:அல்லா ஜானே அல்லா ...(பாடி கொண்டு வருகிறார்)
கவுண்டர்: என்ன மூக்கால பாடுறீங்க?மூக்கடைப்பா?
கமல்: மிஸ்டர் ஐ.ஜி.ஆர் மாறார் ஐ ஆம் சூர் யூ ஆர் அவேர் ஆப தி பவர் ஆப தி ஸ்டேட் ஒப் தி ......
கவுண்டர்: எங்கனா மனப்பாடம் பண்ணிட்டு வந்துட்டீங்களா?
கமல்: மறார் கமாண்டிங் ஏரியாவில் இருக்கும் கவுண்டரை மாத்துங்க!இல்லன்னா தேர் வில் பீ டூ மச் எக்ஸ்ப்ளோஷன்ஸ்  இன் த  சிட்டி!
கவுண்டர்: ஐயோ இதென்னடா வம்பா போச்சு!
கமல்: ஆர்னால்ட் ஸ்வாசனேகர் சொல்வதைத்தான் கவுதம புத்தரும் சொல்றார்!
கவுண்டர்: உங்க படம் பாக்க வேணாம்னா?
கமல்: வெல் ஆ என் அடுத்த படம் சாந்தரூபம்!படம் முழுக்க சாந்தமா இருப்பேன்!
கவுண்டர்: படம் முடியும்போது பாந்தமா எல்லாரும் வெளிய போகிடுவாங்க!
கமல்: இதைதான் ஆகாசம்பட்டு சேஷாசலம் சொன்னார்!தஸ்தயெவ்ஸ்கி சொல்வதும் இதைதான்!
கவுண்டர்: எதை?என்ன பேசுறீங்கன்னே ஒன்னும் வெளங்கல!
கமல்:(மைன்ட் வாய்சில்)புரியகூடாதுன்னுதானே இப்படி பேசுறேன்!..
வெல் எனக்கு இந்த "இஷ்" பெயர்களில் நம்பிக்கை இல்லை!அப்படி வைக்க கூடாது தமிழன்!
கவுண்டர்: நீங்க உங்க பெண்களுக்கு அக்ஷரா ஷ்ருதி அப்படின்னு வச்சிருக்கீங்களே?
கமல்:(மைன்ட் வாசியில்)எந்த பால் போட்டாலும் கோல்  போட்டுடுரானே!
வெல் உயிர் போகுற வேளையிலும் தமிழ்ல பேச மாட்டான் தமிழன்!
கவுண்டர்: உங்க பொண்ணே  இப்போதான் தமிழ் பேச கத்துகிட்டு இருக்காங்களாமே?
கவுண்டர்: சார் ஒரு சந்தேகம்!அன்பே சிவம் படத்துல உயிர் போற வேளையிலும் தமிழ் பேச மாட்டீங்களான்னு கேக்குறீங்க!ஆனா உன்னை போல் ஒருவன் படத்துல முக்கால்வாசி இன்குலீசுலதான் நீங்களும் மத்தவங்களும்  பேசிகிரீங்க!ஏன் இந்த சுயமுரண்?
கமல்: வெல் ஊருக்குதான் உபதேசம்!

கவுண்டர்: அது ஏன்  சார் எப்பவுமே இந்து மத கடவுள்களையும்  இந்துக்களின் நம்பிக்கையையுமே கலாசுரீங்க?ஒ உங்க தலிவர் பெரியார் வழி செலெக்டிவ் நாத்திகமா?
கமல்:(மைன்ட் வாய்சில்) மத்த மதங்களை விமர்சனம் பண்ணா டப்பா டான்ஸ் ஆடிடுமே!வெல் ஐ ஆம் கிரிடிசைசிங் ஒன்லி மெஜாரிட்டி ரிலிஜியன்!
கவுண்டர்: என்னய்யா சொல்லுற?எனக்கு துளு மொழி தெரியாது!
கமல்: பாம் வெச்சிருக்கேன்!ஒரு குப்பனோ சுப்பனோ இதை செய்ய முடியுமா மிஸ்டர்  மாரார்?
கவுண்டர்: ஆமா தமிழ் படத்துல மட்டும் மோகன்லாலே போலீசா வராரு(மலையாள படம் போல)ஆனால் தெலுங்கு படத்தில் ஏன் வெங்கடேஷ் வரார்?தமிழனுங்கதான் இளிச்சவாயன்னா?
கமல்: (மைன்ட் வாய்சில்) உஸ்ஸ்...இப்போ எப்படியாவது எஸ்கேப் ஆகிடனுமே!
திடீரென்று அபிராமி அபிராமி அபிராமி என கூரிகொண்டே சுத்ஹி சுத்தி வருகிறார்!
கவுண்டர்: ஐயோ ஆள உடுங்க!

*
அடுத்து மணிரத்னம்

மணிரத்னம்: வெல்...மை நெக்ஸ்ட் பிலிம் அபவுட்...
கவுண்டர்: என்னதான் சொல்ல வரீங்க?
மணிரத்னம்: நான்...அடுத்த...படம்...எடுக்குறேன்....
கவுண்டர்: அது ஏன் எப்போ பாத்தாலும் ஒத்த வார்த்தையில்  பதில் சொல்றீங்க?
மணிரத்னம்: ஏன்னா எனக்கு தெரிஞ்ச தமிழ் அவ்வளவுதான்!
கவுண்டர்: என்னென்னமோ உண்மையெல்லாம் இப்போ வெளிய வருதுடா சாமி!
மணிரத்னம்: பாகிஸ்தானில் ஹீரோ பனமரத்துபட்டியில் ஹீரோயின்!
கவுண்டர்: இவ கல்யாணம் ஆகி அங்க போறா!அதான?
மணிரத்னம்: வாவ் ஹவ் டூ யூ நோ?
கவுண்டர்: ஆமா இதே கதைதான் ரோஜா படத்துல!
மணிரத்னம்: சரிவேண்டாம் அடுத்த கதை...ஹீரோ... ஹீரோயின்... காதல்... கல்யாணம்... தாலி... ஆணியில் தொங்குது!
கவுண்டர்: ஹீரோயின் அடிபட்டு கோமா ஸ்டேஜில்!ஹீரோ வந்து உருகுறார்!
மணிரத்னம்: சரி..அடுத்த கதை புஷ்கர் ஈ பைபா தீவிரவாதம் பத்தி....
கவுண்டர்: ஒண்ணு காதல் இல்லன்னா தீவிரவாதம்!இது தவிர வேறு எதனா கதை எடுக்கமாட்டீங்களா?ஆள உடுங்க சாமி!
மணிரத்னம்: பொன்னியின் செல்வன் எடுக்கலாம்னு.......
கவுண்டர்: ஐயோ வேணவே  வேனாம்!இதுக்கு சுகாசினி வசனம் எழுத வச்சி கொல்லுரதுக்கு நீங்க படம் எடுக்காமலே இருப்பது பெட்டர்!ஒரு நல்ல காவியம் தப்பிச்சிது!கல்கியின் ஆத்மா வாழ்த்தும்!அப்புறம் என் உங்க படத்துல எல்லாரும் தண்ணியில் "ஏதோ" விட்டது போலவே பேசுபவன் காதிலேயே  விழாதபடி பேசுறாங்களோ?
மணிரத்னம்:(மைன்ட் வாய்சில்)ரொம்ப கேள்வி கேக்குறானே!இப்படி சமாளிப்போம்!மை வைப் சுகாசினி இஸ் கமிங் டு ஆன்சர் யூ!ப்ளீஸ் வெயிட்!
கவுண்டர்: அய்யய்யோ அவுங்களா?ஆள உடுங்க!
 
*
அடுத்து  அமீர் 

அமீர்: என்னா மாமா சவுக்கியமா?
கவுண்டர்: யோவ யாருடா மாமா?
அமீர்: என்னா மாமா இப்படி கோவிச்சிக்குற?
கவுண்டர்: நிறுத்து!டப்பா டான்ஸ் ஆடிடும்!
அமீர்: அடுத்த படம் பாலியஸ்டர் வீரன்!
கவுண்டர்: ஆமா பருத்தி வீரன் பெயர் காரணம் என்ன?பொட்ட காட்டுல நடக்கும் கதையில் எங்கயா  பருத்தி விளையுது?
அமீர்: அம்புட்டு புத்திசாலியா ரசிகன்?இல்ல சித்தப்பு!
கவுண்டர்: யோவ மொதல்ல மாமா இப்போ சித்தப்பாவா?இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லையா?
அமீர்: மொரடனா ஹீரோ திமிர் புடிச்ச தலைக்கு என்னையே வெக்காத ஹீரோயின்!க்ளைமாக்ஸ் வந்து நாளு பேரு சேர்ந்து....
கவுண்டர்: போதும் இதுக்கு மேல சென்சார் ஆகிடும்!
அமீர்:நடுவுல போட்ஸி  படத்த உல்டா பண்ணி போகி அப்படின்னு ஒரு படம் நான் ஹீரோ!
கவுண்டர்: க்ளைமாக்சுலஒன்னைய போகி நெருப்பில் போட்டு கொளுத்திடுரானுங்களா?
அமீர்: ஐயோ உட்டா நீங்க என்னைய கொளுத்திடுவீங்க போல!ஆள உடுங்க!